கர்ப்ப காலத்தின்போது மூன்று நோய்களுக்கு எதிராகப் பாதுகாப்பு கொடுக்க முடியும் போது, ஏன் ஒன்றே ஒன்று மட்டும்?

கர்ப்ப காலத்தில், பெரும்பாலான பெண்கள் டெட்டானஸ் ஊசிகளைப் பெறுகிறார்கள். ஆனால் இப்போது நீங்களும் உங்கள் குழந்தையும் டெட்டானஸ், டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் ஆகிய 3 நோய்களுக்கு எதிரானப் பாதுகாப்பைப் பெறலாம். மூன்றும் ஒன்று சேர்ந்து.

டெட்டானஸ் ஒரு நரம்பு நோயாக இருக்கையில், டிப்தீரியாவோ காற்றுப்பாதைகளைத் தடுக்கும் ஒரு தொண்டை நோய்த்தொற்று ஆகும், பெர்டுசிஸ் 2 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு கொண்டு செல்லும் ஓர் தீவிர சுவாச நோயாகும்.

பிறக்கும் போதே குழந்தைகள் இந்த மூன்று நோய்களிலிருந்து போதுமான அளவு பாதுகாக்கப்படுவதில்லை. கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவதால் தாயிடமிருந்து புதிதாகப் பிறந்த குழந்தைக்கு டெட்டானஸ், டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் ஆகிய மூன்று நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்க உதவுகிறது.

தாயாக போகிறவர்களுக்கான 3-இன்-1 தடுப்பூசியைப் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள்

கர்ப்பக் காலத்தில் 3-இன்-1 தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகள் என்ன?

குழந்தைகள் பிறக்கும் போதே பெர்டுசிஸுக்கு எதிராக போதுமான அளவு பாதுகாக்கப்படுவதில்லை. குறிப்பாக பெர்டுசிஸுக்கு எதிரான தடுப்பூசி 6 முதல் 8 வாரங்களில் தான் தொடங்குகிறது, அவை பெர்டுசிஸ் நோய் மற்றும் குழந்தை பிறக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் அல்லது வாழ்க்கையின் முதல் சில மாதங்களிலே சிக்கல்களுக்கு ஆளாக்குகின்றது. கர்ப்பகாலத்தில் தாய்க்கு கொடுக்கப்படும் தடுப்பூசி அதன் பாதுகாப்பு கவசத்தை பிறந்த குழைந்தைக்கு அதன் சக்தியை வழங்குகிறது.

பெர்டுசிஸ் என்றால் என்ன?

பெர்டுசிஸ் (கக்குவான் இருமல் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது மிக வேகமாகத் தொற்றிக்கொள்ளும் ஓர் சுவாச நோய்த்தொற்று ஆகும், குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இது மிகவும் தீவிரமாக இருக்கும். குழந்தை பிறந்தவுடன் ஏற்படக்கூடிய பொதுவான அறிகுறிகள் தொடர்புடைய இருமல் அல்லது அறிகுறி இல்லாத இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் பிற அறிகுறிகளைக் கண்டறிவது மிகவும் கடினம்.

குழந்தைக்கு எவ்வாறு பெர்டுசிஸ் தொற்றிக்கொள்கிறது?

பெர்டுசிஸ் தொற்று தண்ணீர்துளிகள் மூலம் காற்று வழியாகப் பரவுகிறது, எனவே இது இருமல் அல்லது தும்முதல் அல்லது நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருக்கமாக இருக்கும்போது மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு பெர்டுசிஸ் நோய்த்தொற்றுவதற்கான முக்கிய காரணம் தாய்மார்கள்தான். அவர்களுக்கு சகோதரர்கள் அல்லது சகோதரிகள், பிற குடும்ப உறுப்பினர்கள் அல்லது பராமரிப்பாளர்களிடமிருந்தும் நோய்த்தொற்று ஏற்படலாம்.

என் குழந்தைக்கு பெர்டுசிஸ் வந்தால் என்ன நடக்கும்?

பெர்டுசிஸ் 2 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கு கடுமையான மற்றும் சில நேரங்களில் ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தும். கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள் சுவாசிப்பதில் ஏற்படும் சிரமத்தின் காரணமாக அவர்களின் உடல் ஊதா நிறமாக மாறலாம். பச்சிளங் குழந்தைகளில் இருமல் குறிப்பாக கவனிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் மிக குறிகிய இடைவெளியில் மூச்சை விடாமல் இருக்கலாம். பெர்டுசிஸ் உடைய 2 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 90% குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும்.

3-இன்-1 தடுப்பூசியின் பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா?

கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், கர்ப்பக் காலத்தில் 3-இன்-1 தடுப்பூசி பொதுவாக நன்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உட்செலுத்தப்பட்ட இடத்தில் லேசானது முதல் மிதமான வலி, வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவை மிகவும் பொதுவான பக்க விளைவுகளாகும்.

பெர்டுசிஸுக்கு எதிராக எனது பிறந்த குழந்தையைப் பாதுகாக்க வேறு வழிகள் உள்ளதா?

இளம் குழந்தைகளில் பெர்டுசிஸைத் தடுக்க பல்வேறு உத்திகள் உள்ளது, இதில் தாய்மார்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரை தொடர்புக் கொள்ளவும்.

கர்ப்பக் காலத்தில் நான் 3-இன்-1 தடுப்பூசி எப்போது போட்டுக்கொள்ள வேண்டும்?

கர்ப்பக் காலத்தில் 3 – இன் – 1 தடுப்பூசி பெற பொருத்தமான நேரம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு உங்கள் மகப்பேறு மருத்துவரை தொடர்புக் கொள்ளவும்.

3 இன் 1 உறுதி மொழியை எடுக்கவும்

மேலே செல்ல

References: ● WHO Position paper,Tetanus vaccines,Weekly epidemiological record, Feb 2017. ● Centers for Disease Control (CDC). Diphtheria. Symptoms.[accessed Oct 2019]; Available at : https://www.cdc.gov/diphtheria/about/symptoms.html ● Centers for Disease Control (CDC). Pertussis (Whooping Cough). Complications.[accessed Oct 2019]; Available at: https://www.cdc.gov/pertussis/about/complications.html

*The list of diseases mentioned here is as per the diseases featuring in the list of preventable diseases by IAP in their routine and catchup vaccination recommendations.
There could be diseases beyond the list which could affect the child. Please consult your pediatrician for more information.

Information appearing in this material is for general awareness only and does not constitute any medical advice. Please consult your physician for any question or concern you may have regarding your condition.
The doctor show in this material/ multimedia content is being used for illustrative purpose only and is a professional model.