challange
challange
challange

குழந்தைகளிடத்தில் தொற்றுநோய்களின் ஆபத்து அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால் தடுப்பூசி போடுவதைத் தாமதப்படுத்தக்கூடாது என்று குழந்தைநல மருத்துவர்கள் சொல்கின்றனர்.
கடுமையான நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவது அவசியம்.

தடுப்பூசி போடுவதை மறந்து விடாதீர்கள்

அப்பொழுது தான் நோய்கள் வராமல் தடுக்க முடியும். குழந்தை பருவத்தை அல்ல.

18 வயது வரையில் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலை காண கீழ்க்காணும் தலைப்புகளை கிளிக் செய்யவும்.

பதிவிறக்குங்கள்

கோவிட்-19 சர்வதேச பரவலின் போது உங்கள் குழந்தை தடுப்பூசியை தவற விட்டு விடுமோ என்று கவலையாக இருக்கிறதா?

உங்கள் கேள்விகளுக்கான பதிலைப் பெறுங்கள்

1.நான் என் குழந்தைக்கான தடுப்பூசியை தவறவிட்டேனா என்று தெரியவில்லை. என்ன செய்ய வேண்டும்? மேலும் படிக்க
  • குழந்தைகளுக்கு சரியான காலத்தில் தடுப்பூசி போடுவது தீவிரமான மற்றும் ஆபத்தான நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க ஒரு முக்கியமான வழியாகும். பரிந்துரைக்கப்பட்ட நோய்த்தடுப்பு அட்டவணைப்படி குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) பரிந்துரைக்கிறது
  • குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாதபோது அல்லது தடுப்பூசி போடுவது தாமதமாகும்போது, தடுப்பூசி மூலம் எளிதில் தடுக்கக்கூடிய கடுமையான நோய்களுக்கு எதிராக அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பார்கள்
  • வயதுக்கு ஏற்றாற் போல் உங்கள் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள் பற்றித் தெரிந்துகொள்ள் உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டையை இன்றே பார்க்கவும். தவறவிட்ட அல்லது உரிய தடுப்பூசி குறித்த கூடுதல் தகவலுக்கு உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவும்
2.கோவிட்-19 நோய் பரவலின்போது தவறவிட்ட / உரிய தடுப்பூசிக்கான கிடைக்கக்கூடிய வழிகாட்டுதல்கள் யாவை? மேலும் படிக்க
  • உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய வழிகாட்டுதல்கள் (டபிள்யூஹெச்ஓ): நோய்த்தடுப்பு என்பது ஒரு அத்தியாவசிய சுகாதார சேவையாகும். நோய்த்தடுப்பு சேவைகளை சீர்குலைப்பது, குறுகிய காலத்திலேயே, பாதிக்கப்படக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை மற்றும் தடுப்பூசியால் தடுக்கக்கூடிய நோய்களின் தாக்கத்தை அதிகரிக்கும் (விபீடீக்கள்)
  • இந்திய அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஐஏபி) வழங்கும் இந்திய வழிகாட்டுதல்கள்: தொற்று நோய்களைத் தடுப்பது (நோய்த்தடுப்பு மருந்துகள் உட்பட) மற்றும் நிர்வகித்தல் ஆகியவை “அத்தியாவசிய மருத்துவ சேவை” என்று கருதப்படுகிறது. “நோய்த்தடுப்பு என்பது ஒரு முக்கிய சுகாதார சேவையாகும்” இது தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட மற்றும் சாத்தியமான கோவிட்-19 தொற்றுநோய்களின் போது தொடர்ச்சியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். கோவிட்-19 தொற்று நோய்களின் போது ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கு நோய்த்தடுப்பு ஏற்படுவதற்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆபத்து எதுவும் இல்லை
3.இந்த காலங்களில் தடுப்பூசி போடும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் / கவனிப்புகள் என்ன? மேலும் படிக்க
  • முன்கூட்டியே எடுக்கப்பட்ட வருகைக்கான சந்திப்போடு தடுப்பூசிக்காக உங்கள் குழந்தை நல மருத்துவரை சென்று பாருங்கள்
  • அடிக்கடி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஆல்கஹால் சார்ந்த கிருமி நாசினியை பயன்படுத்துங்கள்.
  • கைக்குழந்தைகளைத் தவிர்த்து அனைத்து பராமரிப்பாளர்களும் குழந்தைகளும் முகமூடி அணிய வேண்டும்
  • எல்லா நேரங்களிலும் சமூக இடைவெளியைப் பராமரித்து முடிந்தவரை மேற்பரப்புகளைத் தொடுவதைத் தவிர்க்கவும்
  • பொம்மைகளையும் / தனிப்பட்ட பொருட்களையும் எடுத்துச் செல்லவதையும் கதவு கைப்பிடிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும்
  • டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்
  • மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுடன் செல்லக்கூடாது
  • ஊழியர்களின் ஆலோசனையின் படி தடுப்பூசி கிளினிக்கில் நுழையவும், வெளியேறவும் மற்றும் நடந்துக் கொள்ளவும்
4.கோவிட்-19 இன் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், எனது குழந்தையை தடுப்பூசி போட அழைத்துச் செல்வதில் நான் கவலைப்படுகிறேன்?மேலும் படிக்க
  • அத்தியாவசிய பொருட்கள் (பால், மருந்துகள், முதலியன) மற்றும் சேவைகள் (வங்கி, சுகாதாரம் போன்றவை) பெற வெளியே செல்வது கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தைத் தருகிறது. ஆனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த ஆபத்தைக் குறைக்க முயற்சிக்கிறோம்
  • அதேபோல், தடுப்பூசி ஒரு அத்தியாவசிய மருத்துவ சேவையாகும் மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தொற்றுநோய் ஏற்படுவதைக் குறைக்கும்
  • மாறாக, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாதபோது அல்லது தடுப்பூசி தாமதமாகும்போது, தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய கடுமையான நோய்களுக்கு எதிராக அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள்
  • உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனையின் படி பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றுவது ஒரு புத்திசாலித்தனமான முடிவு
5.எனது குழந்தையின் தடுப்பூசிக்கு எவ்வளவு காலம் வரை தாமதம் அனுமதிக்கப்பட்டுள்ளது? மேலும் படிக்க

உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டவணைக்கு வழிகாட்ட உங்கள் குழந்தை மருத்துவர் சிறந்த ஆதரவு தருவார். இன்று உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டையைப் பார்த்து, மேலும் தகவலுக்கு உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவும்.

தடுப்பூசியின் மூலம் உயிருக்கு ஊறு விளைவிக்கக் கூடிய 20 நோய்களிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்

தடுப்பூசி பல நாடுகளில் தடுக்கக்கூடிய நோய்களை மிகக் குறைந்த அளவிற்குக் குறைக்க எங்களுக்கு உதவியது. இருப்பினும், மக்கள் தங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெறுவதை நிறுத்தினால், தடுப்பூசி-தடுக்கக்கூடிய சில நோய்கள் மீண்டும் தோன்றுவதைக் காணலாம்.

தடுப்பூசிகள் இவற்றை அழிக்க உதவி செய்துள்ளது.

  • பெரிய அம்மை
  • போலியோ கிட்டத்தட்ட
  • உலகளவில் 2000 மற்றும் 2018 க்கு இடையில் அம்மை தொடர்பான இறப்புகளை 73% குறைக்க.
  • 2000-2018 க்கு இடையில் ரூபெல்லா சம்ப்வங்களை 97% குறைக்க

தடுப்பூசிகள் சமூகத்திற்கும் உதவி செய்துள்ளது:

  • தனிநபர்கள்- தடுப்பூசிகள் வரலாற்று ரீதியாக குழந்தைகளின் மரணத்திற்கு பொதுவான காரணியாக இருந்த தடுப்பூசியால் தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதன் மூலம் ஆரோக்கியத்தையும் நன்றாக இருத்தலையும் மேம்படுத்த உதவும்.
  • சமூக தடுப்பூசி என்பது சமூகங்களுக்குள் தடுப்பூசியால் தடுக்கக்கூடிய நோய்களின் பரவலைக் குறைக்க உதவும்.
  • பொருளாதாரங்கள்- ஆய்வுகள் தடுப்பூசி பொருளாதார வளர்ச்சி, உற்பத்தித்திறன் மற்றும் தொழிலாளர் பங்களிப்பு ஆகியவற்றில் பயனுள்ள முயற்சிகளைக் கொண்டிருக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றன.
*• உலகளாவிய தட்டம்மை இறப்புகள் 2000 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 536000 இலிருந்து 73% ஆக மாறி 2018 இல் 142,000 ஆக குறைந்துள்ளது.
**2000 ஆம் ஆண்டில் 102 நாடுகளில் ருபெல்லா சம்பவங்கள் 670894 இருந்து 97% குறைந்து, 2018 இல் 151 நாடுகளில் 14621 சம்வங்களாகப் பதிவாகியுள்ளன.


தவறவிட்ட அல்லது சரியான தடுப்பூசிக்கு இன்றே உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவும்!


Share On
மேலே செல்

* Adapted from Advisory committee of vaccination & immunization practices, 2018-19 recommendations by Indian Academy of Pediatrics
Disclaimer: Information appearing in this material is for general awareness only and does not constitute medical advice.
The above vaccination list is not comprehensive and you may be advised additional vaccination based on your medical condition.
Please consult your Pediatrician for more information, question or concern you may have regarding your condition.
Issued in public interest by GlaxoSmithKline Pharmaceuticals Limited. Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 030, India.